விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம்! – அமைச்சர் பொன்முடி!
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ”பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும். விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டு முதலே அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு அனைத்து கல்லூரிகளிலும் அமலுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.