வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (18:07 IST)

அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி

மிக விரைவில் அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி  முதல்வர், துணை முதல்வர் ஏற்படுத்துவார்கள் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.



கரூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், முதல்வரும், துணை முதல்வரும் தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி முடிவு செய்யப்படும் என கூறுவார்கள்.

எனவே தேர்தல் அறிவிப்புக்கு நாள் உள்ளது எனவே  மிக விரைவில்,  தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தலைமையில்  வெற்றிக் கூட்டணியை ஏற்படுத்துவார்கள்.  இன்னும் 2 ஆண்டு கால ஆட்சி உள்ளது.  அதன் பிறகு எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றார்.  இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

சி.ஆனந்தகுமார்