வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (10:10 IST)

பாஜக கூட்டணி ! ஆனாலும் எதிர்ப்போம் ..? - அதிமுக எம்.பி.பாரதிமோகன்

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தாலும் ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்துவோம் என்று மயிலாடுதுறை அதிமுக எம்.பி ஆர்கே பாரதிமோகன்  தெரிவித்தார்.
ஆடுதுறையில் நடைபெற்ற நிகழ்சியில் பேசிய அவர் கூறியதாவது:
 
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் கூட ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டங்களை தடுப்போம். மேலும் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால்தான் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்தார்.
 
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக - பாமக ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.