வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (13:50 IST)

அதிமுகவை விமர்சனம் செய்துவிட்டு...ஏன் மெகா கூட்டணி - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

முன்னர் பலமுறை அதிமுகவை விமர்சித்துவிட்டு தற்போது எதற்காக அக்கட்சியின் மெகா கூட்டணியில் பாமக  கைகோர்த்துள்து  என்று சில நாட்களாக மீடியாக்களில் பாமகவை குறித்து பல செய்திகள் வெளியானது. சமூகவலைதளங்களில் பாமக குறித்து மீம்ஸ்கள் டிரெண்டானது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக எம்.பி.டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடனான கூட்டணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது: தமிழக மக்களின் நலன் கருதிதான் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்றார். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாமக செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டத்தில் குறித்து தீர்மானிப்பதற்கு பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தார். மேலும் இதில் கட்சியில் உள்ள பதவியில் இருப்போர் முதற்கொண்டு கடைநிலை தொண்டன் வரைக்கும் எல்லோருடைய கருத்துக்களை கேட்டு ஆலோசித்த பிறகுதான் இம்முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
 
மேலும் திமுகவை காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால் தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். திருமாளவன் மாதிரி யாரும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அவர் தற்போது திமுகவுடன் அணி சேர்ந்துள்ளார். அதேபோல வைகோ திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையான விமர்சித்தார் இப்போது அவரும் திமுகவில் இணைந்துள்ளார். 
 
நாங்களும் அதிமுகவை விமர்சித்தோம். ஆனால் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக உள்ளோம்.எங்கள் கொள்கையை எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். போராட்டும் நேரத்தில் போராடுவோம். கூட்டணியில் இருந்தால்தான் இன்னும் அதிகமாக அழுத்தம் கொடுக்க முடியும்! தமிழக மக்களின் நலனுக்காகவே அதிமுகவுடனாக இந்த மெகா  கூட்டணியில் சேர்ந்துள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
பாமக (பாட்டாளி மக்கள் கட்சி ) நிறுவனர் டாக்டர். ராமதாஸ் முன்பு ஒரு முறை நடந்த நிகழ்ச்சியில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது பெற்ற தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.