1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (16:38 IST)

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு ஈபிஎஸ் வந்தால் வசதிகளை காட்ட தயார்: அமைச்சர் சிவசங்கர்

sivasankar
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.
 
முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு எனவும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
 
 முன்னதாக கிளம்பாக்கத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என கடந்த இரண்டு நாட்களாக பயணிகள் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு நேரில் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ததாகவும் அதன் பின்னர் போதுமான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்பட்டது
 
Edited by Mahendran