செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (14:57 IST)

மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள்: நீதிமன்றம் அனுமதி

omni bus
கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் எனவும், மறு உத்தரவு வரும்வரை, நடைமுறையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம்  என்றும், ஆனால் அதே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்தும் இயக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஆன்லைன், மொபைல் ஆப்-களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்ந்த நிலையில் நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படுகின்றன என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran