புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (07:58 IST)

கிளாம்பாக்கத்தில் இன்றும் பயணிகள் மீண்டும் போராட்டம். பேருந்துகளை சிறைப்பிடித்தால் பரபரப்பு..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவில் பேருந்துகள் வரவில்லை என நேற்று திடீரென பயணிகள் அரசு பேருந்துகளை மறித்து சாலை மறியல் செய்த நிலையில் இன்றும் கிளாம்பாக்கத்தில்  பயணிகள் மீண்டும் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்றும் 250க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் தென் மாவட்ட பேருந்துகள் கிளம்பும் என்று கூறப்பட்டாலும் தாம்பரம்  உள்ளிட்ட பகுதியிலிருந்து சில பேருந்துகள் இயக்கப்படுவதை அடுத்து அங்கேயே பயணிகள் பேருந்து முழுவதும் நிரம்பி விட்டால் நேரடியாக தென் மாவட்டங்களுக்கு சென்று விடுகிறார்கள் என்றும் அதனால் தான் கிளாம்பாக்கத்திற்கு போதிய பேருந்துகள் வரவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

Edited by Siva