ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (12:46 IST)

பேருந்துகளை முழுமையாக பரிசோதித்து இயக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறையிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சென்னையில் நேற்று மாநகர பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த அதிரடி உத்தரவை  பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva