ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:03 IST)

இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது: அரசு அதிரடி அறிவிப்பு..!

தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி கொண்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் என்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பேருந்து கூட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் உள்ள தென் மாவட்ட மக்களின் வசதிக்காக அங்கிருந்தே தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

எனவே இனிமேல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரு பேருந்து கூட கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by siva