1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (13:28 IST)

சிறுபான்மையினர் பற்றிய சீமான் பேச்சுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி

senji masthan
சிறுபான்மையினர் பற்றிய சீமான் பேச்சுக்கு  அமைச்சர் செஞ்சி மஸ்தான்  பதிலடி கொடுத்துள்ளார்.

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான்.  இக்கட்சியின் சார்பில் மணிப்பூரில் குகி பழங்குடி இன மக்களுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து,  சமீபத்தில்   சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமமான், ‘’மணிப்பூரில் இருந்து மக்கள் யாரும் வந்து நமக்கு ஓட்டுப்போவதில்லை, இங்கேயுள்ள கிரிஸ்தவர்களும் நமக்கு ஓட்டளிக்கப் போவதில்லை… கிருஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள்  தேவனின் பிள்ளைகள் என்று  நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகள் ‘’என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து, ஜூன் 7 ஆம் தேதி புறப்பட்டு, 40 நாட்கள் புனித ஹஜ் பயணம் முடித்துவிட்டு சென்னை  திரும்பிய அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் செய்தியாளார்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ‘’நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுதான் ஏப்பம் வரும். அவர் சாத்தானாக மாறி அவர்களை சாத்தான் என்று கூறுகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
சீமானின் பேச்சுக்கு ஏற்கனவே நடிகர் ராஜ்கிரண், இயக்குனர் பிரவீன், ராஜேஸ்வரி பிரியா உள்ளிட்ட பலரும் விமர்சனம் கூறியது குறிப்பிடத்தகக்து.