1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (11:50 IST)

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல: அமைச்சர் சேகர் பாபு

sekhar
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று வருகை தந்த அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல என்றும் அது மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்றும் தெரிவித்தார்
 
மேலும் சிதம்பரம் நடராஜர் கோயில் வருமான கணக்கு கேட்கும் போது முறையாக அதனை காட்டுவது தீட்சதர்களின் கடமை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டுமின்றி தவறு எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் கடமை இந்து சமய அறநிலைத்துறை போது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
 
Edited by Siva