செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (12:45 IST)

இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியது உண்மை: ப. சிதம்பரம்

Chidambaram
இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றும் நேற்று அமெரிக்காவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அவர் கூறிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் சீதாராம் நிர்மலா சீதாராமன் கூறியது முற்றிலும் உண்மை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்
 
தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் அல்லது கட்சி நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை,அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தானே எப்போதும் கூறுவார்கள். அந்த பாணியில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாய் மதிப்பு குறித்து கூறியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்

Edited by Siva