வெள்ளி, 1 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (20:08 IST)

காங்கிரஸ் தேர்தலில் யாருக்கு ஓட்டு.. அறிக்கை வெளியிட்ட கார்த்தி சிதம்பரம்!

karthi chidambaram
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தனது வாக்கு யாருக்கு என்பதை கார்த்தி சிதம்பரம் எம்பி அறிக்கையாகவே வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது
 
சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் எந்த ஒரு வேட்பாளருக்கும் வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை. போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நடந்து வாக்களிக்க தகுதி உடையவர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.
 
சோனியா காந்தி ஏதோ ஒரு வேட்பாளரை மட்டும் விரும்புகிறார் என்று தவறாக சிலர் பரப்பி வருகிறார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எனவே, வாக்களிக்க தகுதியுடைய அத்தனை காங்கிரஸ் நண்பர்களும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். நான் சசி தரூருக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
 

Edited by Mahendran