சின்ன பையனைவிட்டு பேசவைக்க வேண்டாம்: தேமுதிகவிற்கு அமைச்சர் எச்சரிக்கை
திமுக, அதிமுக கூட்டணியில் சேர தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு உரிய தொகுதிகளை பெற்று வருகின்றன. ஒருசில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியதே வெளியே தெரியாமல் கமுக்கமாக காரியத்தை சாதித்து கொண்டன.
ஆனால் ஒரு காலத்தில் 10% வாக்குகள் வைத்திருந்த விஜயகாந்தின் தேமுதிக, தற்போது வெறும் இரண்டு சதவிகித வாக்குகளை மட்டுமே வைத்திருப்பதை மறந்துவிட்டு எந்தவித கொள்கையும் கோட்பாடும் இன்றி அதிக தொகுதிகள் கொடுப்பவர்களுடன் கூட்டணி என பகிரங்கமாக அறிவித்து வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் பிரபாகரன், அதிமுக, திமுக தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். அரசியல் அனுபவமே இல்லாத அவர் இவ்வாறு விமர்சனம் செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது
இந்த நிலையில் தேமுதிக சின்ன பையனைவிட்டு பேசவைக்க வேண்டாம் என்றும் எங்களுக்கும் பேசத்தெரியும் நாங்க ரொம்ப பேசுவோம் என்றும், மார்ச் 5ஆம் தேதிக்கு பிறகு வேடிக்கையை வச்சுக்கிறோம் என்றும் அதன் பின்னர் எது வருது, எது போகுது என பார்ப்போம் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். நெற்று அமைச்சர் ஜெயகுமார், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையாவிட்டாலும் கவலையில்லை என்று கூறியதால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக இணைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது