புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (15:23 IST)

ரூ.2,609 கோடி மானியத்தை வழங்குக: மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை!

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என அமைச்சர் கோரிக்கை. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாநில அரசுகள் பெரும் நிதி சிக்கலில் சிக்கியுள்ளன. மாநில பொருளாதார வளர்ச்சியை எட்ட பல மாநிலங்கள் தங்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரித்தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆகியவற்றை மத்திய அரசிடம் கோரி வருகின்றன. 
 
இந்நிலையில் 15வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ரூ.846 கோடியும், பீகாருக்கு ரூ.502 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.330 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் தமிழகத்திற்கும் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பொருளாதார உற்பத்தி கொண்ட மாநிலமாக விளங்கும் தமிழகத்திற்கு மீண்டும் நிதியை குறைத்து அளித்துள்ளதாக அரசியல் கட்சிகள் சில ஆதங்கம் தெரிவித்துள்ளன. 
 
அந்த வகையில் அமைச்சர் காமராஜ் தமிழக அரசுக்கு ரூ.2,609 கோடியை வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இன்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், 
 
தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை 1.34 லட்சம் பேர் 92 ரயில்கள் மூலம் வெளி மாநிலம் சென்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள சுமார் 4 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். 
 
அதோடு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.