வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (16:05 IST)

அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

வடமாநிலங்களில் பாஜக கட்சி பல மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், தென்மா நிலங்களாக, தமிழ் நாடு, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜக ஜெயிக்க வேண்டி பல முயற்சிகளில் இறங்கியுள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைவராகஅண்ணாமலை உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன் வீட்டில்  ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
 
annamalai

இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், ''ஒரு ஒப்பீட்டுக்கு-- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்...
 
BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று....அதாவது, குழந்தைகள்,  ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! 
 
அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா...என்று தெரிவித்துள்ளார்.