அதிமுக கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைந்த ஒரே கட்சி.. 2 தொகுதிகள் ஒதுக்கீடா?
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கூட்டணிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மூன்று கட்சிகளுமே அரசியல் கட்சிகளை இழுக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது
திமுக கூட்டணியை பொருத்தவரை ஏற்கனவே இருந்த கட்சிகள் அப்படியே இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தான் பாஜக கூட்டணிக்கு மாறும் போல் தெரிகிறது
பாமக ,தேமுதிக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்க்கப்படும் நிலையை இதுவரை ஒரு கட்சி கூட அதிமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை கூட நடத்தப்படவில்லை
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த கூட்டணி அதிமுகவிடம் ஈரோடு, பொள்ளாச்சி, மத்திய சென்னை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ,திண்டுக்கல் என ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுத்ததாகவும் இதற்கு அதிமுக ஒப்பு கொண்டதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
Edited by Mahendran