Daily Horoscope
✕

ஆளுநர் விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கின்றாரா? உண்மை என்ன?

Written By Mahendran
Updated: புதன், 28 ஜூன் 2023 (12:27 IST)
இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 
 
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று பிற்பகல் 12:30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ரவி கலந்து கொள்ளும் இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆளுநர் ரவி பங்கேற்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியது.
 
ஆனால் தற்போது அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளதாகவும் அதனால்தான் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஓட்டுனர் பாலகிருஷ்ணன் மரணம் - உடற்கூராய்வில் வெளியன அதிர்ச்சி தகவல்கள்!..

பழனிச்சாமி இடத்தில் இருக்கவேண்டியது நயினார் நாகேந்திரன்தான் - வைகோ சொன்ன பிளாஷ்பேக்..

முதுமலை வனப்பகுதியில் வன்னியரசு.. எழுந்த சர்ச்சை.. புலிகள் ஆணையத்திடம் புகார்...

அமெரிக்கா மீண்டும் தவறிழைத்தால், எங்கள் படைகள் தக்க பதிலடி கொடுக்கும்.. ஈரான் எச்சரிக்கை..

பொங்கல் ரயில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!.. ஏமாற்றத்தில் தென் மாவட்ட பயணிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments