திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (19:15 IST)

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா உறுதி !

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5709 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 349,654 ஆக உயர்ந்துள்ளது .

இந்நிலையில், கொரொனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும் மக்களுக்காக சேவையாற்றிவரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இன்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ளது., அத்துடன் அவரது மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து,அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.