திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (12:17 IST)

எடப்பாடியாரை தமிழக முதல்வராக்குவோம்: திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி லக்‌ஷ்மணன் ஜெர்க்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தலைவர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பியாக இருந்தவரும் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு அணிகளாக அதிமுக இருந்தபோது, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவருமான லக்‌ஷ்மணன் என்பவர் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன் திமுகவில் இணைந்தார்
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவில் திமுக உறுப்பினர் அட்டையை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் லக்ஷ்மணனுக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை முன்னாள் எம்பி லக்‌ஷ்மணன்சந்தித்தார்.
 
திமுகவில் இணைந்து விட்டு அறிவாலயத்தில் பேட்டி அளித்த அவர் லக்‌ஷ்மணன், ‘மாண்புமிகு அண்ணன் எடப்பாடியாரை தமிழக முதல்வராக்குவோம் என பேசி விட்டு அதன் பின்னர் சுதாரித்து மீண்டும் முக ஸ்டாலினையும் முதல்வராக்குவோம் என்று கூறினார்
 
முன்னாள் எம்பி லக்‌ஷ்மணன் அவர்களின் இந்த ஜெர்க் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது