அது மின்தடை.. இது மின்வெட்டு.. ஆக மொத்தம் பல்ப் எரியல! – சட்டமன்றத்தில் துரைமுருகன் நகைச்சுவை
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் பேரவையில் மின்வெட்டு குறித்து அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளதுடன், பல்வேறு சுவாரஸ்யமான விவாதங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய விவாதத்தில் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சினை குறித்து பேசப்பட்டது.
அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மின் தடை தான் ஏற்பட்டது” என கூறினார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திமுக அமைச்சர் துரைமுருகன் “அதிமுக ஆட்சியில் மின்தடை என்கின்றனர். திமுக ஆட்சி காலத்தில் மின் வெட்டு என்கின்றனர். இது தப்பித்துக்கொள்ள அரசுகள் கூறும் வார்த்தை. ஆக மொத்தம் பல்ப் எறியவில்லை” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.