மணியம்மையார் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்..!
மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆன துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கட்சி பணிக்காக மணியம்மையார் அழைத்துக் கொண்டு போனார் என்று சொல்வதற்கு பதிலாக கூட்டிக் கொண்டு போனார் என்று பேசிவிட்டேன் என்றும் தேவையற்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran