புதன், 27 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (17:58 IST)

காவிரி விவகாரம்: டெல்லி செல்லும் தமிழ்நாடு எம்பிக்கள் குழுவின் பட்டியல்..!

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனே திறந்து விட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு எம்பிக்கள் டெல்லி செல்ல உள்ளனர்.  
 
மத்திய ஜனசக்தி துறை அமைச்சர்  ஜேந்திரர் சிங் அவர்களை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.  இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பின் வருமாறு:
 
✦ டி.ஆர்.பாலு (திமுக)
 
✦ ஜோதிமணி (காங்கிரஸ்)
 
✦ மு.தம்பித்துரை (அதிமுக)
 
✦ என்.சந்திரசேகரன் (அதிமுக)
 
✦ கே.சுப்பராயன் (சிபிஐ) 
 
✦ பி.ஆர்.நடராசன் (சிபிஎம்) 
 
✦ வைகோ (மதிமுக) 
 
✦ திருமாவளவன் (விசிக) 
 
✦ அன்புமணி ராமதாஸ் (பாமக) 
 
✦ ஜி.கே.வாசன் (தமாகா) 
 
✦ கே.நவாஸ் கனி (இயூமுலீ)
 
✦ ஏ.கே.பி.சின்னராஜ் (கொமதேக)
 
Edited by Siva