திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (09:09 IST)

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்டம்.. சட்ட வல்லுனர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை..!

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்டமாக சட்ட வல்லுநர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மத்திய நீர்வழித்துறை அமைச்சர் அவர்களை துரைமுருகன் தலைமையிலான எம்பிக்கள் சந்தித்து காவிரி விவகாரத்தில் தீர்வு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு திறந்து விட மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சர் துரைமுருகன் சட்ட வல்லுநர்களுடன் டெல்லியில் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த ஆலோசனையில் நீர்வளத் துறை செயலாளர் சந்திப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் வழக்கறிஞர்கள் உள்ளனர் 
 
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva