புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (08:10 IST)

ஒரே மாதத்தில் அமைச்சர் சேகர்பாபுவின் ஐந்து அதிரடி நடவடிக்கைகள்!

திமுக அரசு பதவியேற்று ஒரு மாதம் தான் ஆகியுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறித்து பார்த்து வருகிறோம். குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தினந்தோறும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு அறிவிப்பும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளும் திருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அறநிலையத்துறை என்றாலே அமைதியாக இருக்கும் துறை என்று இதுவரை இருந்த நிலையில் தற்போது அந்த துறையிலும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன
 
அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் இந்த ஒரே மாதத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கைகளை குறித்து பார்ப்போம். இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் கோவில் சொத்துக்கள் இணையதளத்தில் வெளியிடுவது என்பது இதுவரை பேச்சளவில் இருந்த நிலையில் அது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்த 100 நாட்களில் பிற ஜாதியினர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்காகவும் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.