வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (21:34 IST)

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட தடை: என்ன காரணம்?

தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்தாலும் சுற்றுலா பயணிகள் முதலில் பார்ப்பது எம்ஜிஆர் மற்றும் அண்ணா சமாதிகளாகத்தான் இருக்கும். இதிலும் தற்போது எம்ஜிஆர் சமாதியில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அண்ணா சமாதியில் கருணாநிதி நினைவிடம் இருப்பதை அடுத்து சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் இதனை பார்த்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் ஜெயலலிதா நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து விடப்பட்டது என்பதும் இதனை பார்க்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட பொதுப்பணித் துறை அதிரடியாக தடை விதித்துள்ளது 
 
அருங்காட்சியகம், அறிவியல் பூங்கா ஆகியவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பணிகள் முடிந்தவுடன் மீண்டும் நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தற்காலிகமாக இந்த நினைவிடத்தை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்