வியாபாரிகள் மரண வழக்கு ...டிஜிபி உத்தரவுக்கு அவசியம் இல்லை... இன்றே விசாரணை - நீதிமன்றம் அதிரடி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தின் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நாடெங்கிலும் இருந்து கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர், தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று காவல்துறையினர் பதிந்த எஃப்.ஐ.ஆர் பதிவிற்கும் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் கடைக்கு முன்னிருந்த சிசிடிவியின் பதிவான காட்சிகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக மீடியாக்கள் பகிரங்கமாக செய்திகள் வெளியிட்டனர்.
இந்நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார் மாஜிஸ்திரேட் பாரதிதாசன்.
இதுகுறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் கூறியுள்ளதாவது :
நான் கட்டாயப்படுத்திய பிறகே லத்திகளை காவல்துறையினர் காவல் நிலைய போலீஸார் ஒப்படைத்தனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், சாத்தான் குளம் காவல்நிலைய டேபிள் மற்றும் லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் காவலர் ரேவதி கூறினார். நாம் கட்டாயப்படுத்தியப் பிறகுதான் போலீஸார் லத்திகளை ஒப்படைத்தனர்.
லத்தியை தரமறுத்த மகரஜனை கையை வைத்து தள்ளி அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மிகவும் சிரமப்பட்டே சாட்சியம் அளித்த காவலர் ரேவதியிடம் கையெழுத்து பெற முடிந்தது என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மதுரை நீதிமன்றம்… சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக உடனடியாக விசாரணையைத் தொடங்கலாம் டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், சாட்சியம் அளித்த ரேவதிக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுக்காப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.