1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (11:49 IST)

போலி குற்றப்பத்திரிக்கை; மாஜிஸ்திரேட் மிரட்டல்; வழக்குபதிய வாய்ப்பு! – நீதிமன்றம் அதிரடி!

சாத்தான்குளம் வழக்கில் இன்று நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்தது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிக்கைக்கு நேர்மாறான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டை அவதூறாக பேசி மிரட்டிய காவலர் மற்றும் 2 பேர் மீது நீதிமன்ற அவமரியாதை வழக்கு பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி அல்லது நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கை விசாரிக்க இயலுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிபிஐ இந்த விசாரணையை தொடங்கும் முன் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாகவும் நீதிபதிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ராஜ் பிரேத பரிசோதனையில் அவர்களது உடலில் ஏகப்பட்ட காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை, மாஜிஸ்திரேட் அறிக்கையை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிய வாய்ப்பிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் மாஜிஸ்திரேட்டை அவமதித்த வழக்கில் காவலர்கள் மூவரும் தனித்தனி வழக்கறிஞர்களை நியமித்து 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.