திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (10:21 IST)

காதல் திருமணம்…. பாராலிம்பிக் மாரியப்பனின் தம்பி போலிஸில் தஞ்சம்!

பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மாரியப்பனின் தம்பி கோபி போலிஸில் தனது காதல் மனைவியுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மாரியப்பன் தங்கவேல். இவர் சேலம் மாவட்டத்தின் சேர்ந்தவர். இவருக்கு கோபி என்று ஒரு தம்பி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் கோபி தன்னுடைய 20 வயது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இப்போது கோபியும் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பவித்ராவும் திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.