ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:42 IST)

இணையத்தில் வெளியான பரிதாபங்கள் சுதாகரின் நிச்சயதார்த்த புகைப்படம்!

பரிதாபங்கள் சேனல் மூலம் பொழுதுபோக்கு வீடியோக்களைப் பதிவேற்றி பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர் இணை.

தமிழில் யுடியூப் சேனல்கள் பிரபலம் ஆன காலத்தில் இருந்து சூப்பர் ஸ்டார்களாக வலம் வருபவர்கள் கோபியும் சுதாகரும். இவர்கள் இருவரும் முதலில் மெட்ராஸ் செண்ட்ரல் சேனலில் இணைந்து வீடியோக்களைப் போட்டு வைரல் ஆகினர். பின்னர் தனியாக பரிதாபங்கள் என்ற சேனலை தொடங்கி நடத்தி வருகின்றனர். அது தவிர சில படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த இரட்டையரில் சுதாகருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் பரிதாபங்கள் சேனலின் உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.