1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (15:24 IST)

நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று!

மலையாள நடிகர் சுரேஷ் கோபி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் இப்போது இந்தியாவில் உச்சத்தில் இருக்கிறது. இந்த அலையில் பாதிக்கப்படுபவர்கள் அதிக பாதிப்புகள் இல்லாமல் குணம் அடைந்து வருவதே ஒரே ஆறுதல். இந்நிலையில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி தான் தொற்றுக்கு ஆளாகியிருப்பதை அறிவித்துள்ளார்.

அவரின் டிவிட்டர் பக்கத்தில் ‘எச்சரிக்கையாக இருந்தபோதும் எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சிறு காய்ச்சலை தவிர நலமாக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.