1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Manithaneya Makkal Katchi to select new executives

மனித நேய மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு: ஜவாஹிருல்லா அறிவிப்பு

ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 

 
இது குறித்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள  அறிவிப்பில், மனித நேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் மனித நேய மக்கள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
 
இதில், துணைத் தலைவராக ஷிபியுல்லாஹ் கான், துணை பொதுச் செயலாளர்களாக ஜெய்னுல் ஆபிதீன், கோவை செய்யது, ஜோசப் நொலஸ்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
அதே போல, மாநில அமைப்புச் செயலாளர்களாக முஹம்மது கவுஸ், அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ., சரவணபாண்டியன், யாகூப், மாயவரம் அமீன், தஞ்சை பாதுஷா, தலைமை நிலையச் செயலாளராக ஹுசைன் கனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
தலைமை பொதுக்குழுவில் அப்துல் சமது பொதுச் செயலாளராகவும், ரஹ்மத்துல்லாஹ் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என  கூறப்பட்டுள்ளது. 
 
About Writer
K.N.Vadivel