புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (07:37 IST)

மனைவியின் தோழியுடன் காதல் ! கணவன் எடுத்த கொடூர முடிவு !

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கணவர் தனது மனைவியைக் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஜெயவேல் மற்றும் திலகம். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த திலகம் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாரிடம் அவரது கணவர் ஜெயவேல் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் திலகம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் ஜெயவேலியிடம் தங்கள் விசாரணையைத் தொடங்க மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

திலகத்தின் தோழி ஒருவரோடு ஜெயவேலுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது காதல் உணர்வு மிகுதியால்  தனது ஆட்டோவில் அந்த மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரோடு தனது காதலியியின் பெயரையும் எழுதியுள்ளார் ஜெயவேல். இதனால் மனைவி திலகத்துக்குத் தெரிந்து சண்டை போட ஆரம்பித்துள்ளார். அப்போது என்னைக் கொலை செய்துவிட்டு அவளோடு வாழ்ந்துகொள் என சொன்னதை எடுத்து குடிபோதையில் இருந்த ஜெயவேல் தலையணையை வைத்து அழுத்தியும் திலகத்தின் புடவையால் அவரைக் கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளார் ஜெயவேல்.