புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (08:18 IST)

ஸ்டாலின் அவர்களின் இன்றைய தமிழ்க்கொலை: தமிழக அமைச்சரின் டுவீட்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மேடையில் பேசும் போது சிலசமயம் வாய் தவறி சில வார்த்தைகளை தவறாக பேசி விடுவதை அவ்வப்போது நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஒருவரே சமீபத்தில் முக ஸ்டாலின் பேசியதை கிண்டலடித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஸ்டாலின் அவர்களின் இன்றைய தமிழ்க்கொலை: “வெட்டி வரச் சொன்னால் கட்டி வருபவன் திமுக தொண்டன்” - நாகைப் பேச்சு, நகைப்புக்குரிய பேச்சு! என்னை விமர்சிப்பதற்கு கூட தமிழ் வார்த்தை கிடைக்காமல், தன் சுய பிம்பமான ஜோக்கரைக் கையிலெடுத்த பரிதாபம்! 
 
அமைச்சர் பாண்டியராஜன் இந்த ட்விட்டிற்கு பல்வேறு கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. ஒரு டுவிட்டர் பயனாளி முக ஸ்டாலின் பேசியது சரிதான் என்றும் நீங்கள் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டு, ‘வெட்டிவிட்டு வா என்றால் வெட்டி கட்டிக்கொண்டு வருவது என்று அர்த்தம். அவர் பேச்சு வழக்கில் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். எள் என்று சொன்னால் எண்ணெய்யாய் நிற்கவேண்டும். மேற்கண்ட பழமொழி ஒரு நல்ல தொழிலாளிக்கு இலக்கணம் என்று பதிவு செய்துள்ளார்.