புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : சனி, 25 ஜனவரி 2020 (18:39 IST)

பிரபல சீரியல் நடிகை தற்கொலை... என்ன காரணம் ?

பிரபல ஹிந்தி சீரியல் நடிகை சேஜல் ஷர்மா இன்று அதிகாலை தாது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடிகர் நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் சேஜல் சர்மா (26 வயது )இவர் விளம்பர  மாடல் ஆகவும் , சீரியல் நடிகையாகவும் இருந்தார். அத்துடன் இணையதள வெப் சீரியஸிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் , இன்று மும்பையில் உள்ள தன் வீட்டில் அதிகாலை 4 மணிக்கு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 
இதை அறிந்த சேஜல் ஷர்மாவில் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து  சென்றவர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது.
 
சேஜல் சர்மாவின் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். 

மேலும், சேஜலின் சீரியல் சமீபத்தி முடிவடைந்ததை அடுத்து அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவர்  மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் இந்த முடிவு எடுத்திருப்பார் என  செய்திகள் வெளியாகிறது.