மாமியாரை அசிங்கமாக திட்டிய மருமகள் – கொலை செய்து நாடகமாடிய கணவன் !
சென்னையில் தனது தாயை அசிங்கமாக திட்டிய மனைவியை கணவன் கொன்று தூக்கில் மாட்டி தற்கொலை என நாடகமாடியுள்ளார்.
சென்னை கிண்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் – இலக்கியா தம்பதிகள். ஜெயராஜ் கால்டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிய இலக்கியா மால் ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதனால் இருவரும் வீட்டில் குறைந்த நேரமே இருப்பதால் ஹோட்டலிலேயே சாப்பிட்டு வந்துள்ளார்.
இதனால் குடும்ப செலவு அதிகமாக ஆவதால் திருவண்ணாமலையில் இருக்கும் தனது தாயை அழைத்து வந்தால் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொள்வார் என மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத இலக்கியா ஹோட்டலிலேயே சாப்பிடலாம் என சொல்லியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் விவாதம் நடக்க மாமியாரை அசிங்கமாக திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ் இலக்கியாவை கடந்த 30 ஆம் தேதி கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் மாட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் பார்த்து அவரை மருத்துவமனையில் சேர்க்க உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் இது தற்கொலை அல்ல கொலை எனக் கண்டுபிடிக்கப்பட ஜெயராஜை போலிஸார் விசாரிக்க அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.