1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : சனி, 7 டிசம்பர் 2019 (12:11 IST)

"சிகிச்சைக்கு பணம் இல்லை" - மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
 
தினத்தந்தி: "சிகிச்சைக்கு பணம் இல்லை - மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி" சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தொழிலாளி ஒருவர், தனது மனைவியை உயிருடன் புதைத்த சம்பவம் கோவாவில் நிகழ்ந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
 
"கோவா மாநிலம் வடக்கு கோவா பகுதியை சேர்ந்தவர் துக்காராம் (வயது 46) கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி தான்வி (44) நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். அவருக்கு அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டியது இருந்தது. அதற்கு துக்காராமிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.
 
அதன்படி, நர்விம் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் அருகில் அவரது மனைவியை உயிருடன் புதைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துக்காராமை கைது செய்து விசாரணை நடத்தி, உயிருடன் புதைக்கப்பட்ட தான்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.