மனைவியை அடித்த சின்னத்திரை நடிகர் கைது!

Last Modified ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (20:10 IST)
சென்னை திருவான்மியூரில் மனைவியைத் தாக்கிய சின்னத்திரை நடிகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவான்மியூர் ஏரிக்கரைச் சாலையை என்ற பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் சின்னத்திரையில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஐஸ்வர் ரகுநாதன் என்பவரும் சின்னத்திரையில் நடிகராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மனைவி ஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து அவருக்கே தெரியாமல் ஐஸ்வர் கடன் பெற்றதாக தெரிகிறது. இதுபற்றி சமீபத்தில் தெரிந்து அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ அவரிடம் கேட்ட போது ஆத்திரமடைந்த ஐஸ்வர், ஜெயஸ்ரீயைத் அடித்துள்லதாக கூறப்படுகிறது
இதுகுறித்து ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர் மற்றும் அவரது தாயார் சந்திரா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனால் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :