திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (15:53 IST)

சென்னையில் 6 ஏடிஎம்களை உடைத்த மர்மநபர்… சுத்தியலோடு போலிஸ் ஸ்டேஷனில் சரண்!

சென்னையில் குடிபோதையில் 6 ஏடிஎம் எந்திரங்களை உடைத்த நபர் போலிஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துள்ளார்.

சென்னை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். 50 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு தொழிலில் பயங்கர நஷ்டம் ஏற்பட்டு வீட்டை விற்றுள்ளார். இதனால் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி அடிமையாகியுள்ளார்.

இந்நிலையில் சென்னை திருநின்றவூர் பகுதியில் உள்ள எஸ் பி ஐ வங்கி மற்றும் கனடா வங்கி ஏடிஎம்களை உடைத்துள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்த அவரை தேடிய நிலையில் தானாகவே கையில் சுத்தியலோடு வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துள்ளார்.