புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (13:43 IST)

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெங்கு தெரியுமா?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையில் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.