வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (12:40 IST)

மொபைலில் முழுக்க முழுக்க ஆபாச படங்கள்.. பெண் போலீஸ் கணவர் கைது..!

சென்னையில் காவல்துறையில் பணிபுரியும் பெண் ஒருவரின் கணவர் தனது மொபைலில் முழுக்க முழுக்க ஆபாச படம் வைத்திருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஜெயபாலாஜி என்பவர் குஜராத் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சென்னையில் காவல்துறை அதிகாரியாக உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ராணுவத்திலிருந்து விடுமுறைக்காக வந்த ஜெய பாலாஜி அக்கம் பக்கம் உள்ள பெண்களை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்கள் சிலர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் ஜெயபாலாஜியின் மொபைல் போனை சோதனை செய்தபோது மொபைல் போன் முழுக்க ஆபாச படங்களாக இருந்தது தெரியவந்தது. 
 
இதனை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு காவல்துறை அதிகாரியின் கணவரே பிற பெண்களை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் லால்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran