செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (16:48 IST)

போலீஸ் என கூறி பணம் பறித்த நபர் கைது

chennai
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் எனக் கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தான் ஒரு போலீஸ் எனக் கூறி அங்கு வருவோரை மிரட்டி, பணம் பறித்து மிரட்டிய அசர் சலி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அசர் அலி மெரினா கடற்கரையில் பலூன் கடை ஒன்றை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், இவர் மீது திருட்டு வழக்கு ஒன்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.