வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (21:06 IST)

பெண் அதிகாரிகளை மிரட்டி துன்புறுத்தல்? லீக்கான பாஜக பிரபலத்தின் 35 ஆபாச வீடியோக்கள்

kirit somaiya mp
பாஜக மாநில துணைத்தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மஹாராஷ்டிய மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா(69). இவர் பற்றிய ஆபாச வீடியோக்கள் மராட்டிய மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இந்த வீடியோக்களின் எண்ணிக்கை 35 என்றும், இவை சுமார் 8 மணி நேரம் ஓடுகின்றன என்ற தகவலும் வெளியாகிறது.

இதனால், ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இடையே நெருக்கடியயை ஏற்படுத்தியுள்ளாது.

கிரித் சோமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மராட்டிய எதிர்க்கட்சிகள் போர்கொடி உயர்தியுள்ள நிலையியோல்,  இதுபற்ரி கிரித் சோமையா, தான் எந்தப் பெண்ணையும் துன்புறுத்தவில்லை,. இதன் உண்மைத்தன்மை பற்றி விசாசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோக்களில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் அரசு அதிகாரிகள் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.

ஏற்கனவே மணிப்பூரில், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்   நாட்டையே உலுக்கிய நிலையில் மராட்டியத்தின் பாஜக முன்னாள் பஎம்பியின் விவகாரம் அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.