செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:27 IST)

உலக பாரம்பரிய சின்னங்கள் தினம்; மகாபலிபுரத்தில் அனுமதி இலவசம்!

உலக பாரம்பரிய சின்னங்களின் தினமான இன்று மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக பாரம்பரிய சின்னங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக பாரம்பரிய சின்னங்கள் நாளையொட்டி இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை காண இலவச அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதான சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.