திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:09 IST)

தமிழக இளம் டென்னிஸ் வீரர் விபத்தில் பலி! – முதல்வர் இரங்கல்!

Deenadayalan
தேசிய டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள மேகாலயா சென்ற தமிழக வீரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பிய்ன்ஷிப் போட்டிகள் மேகாலாயாவில் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் தமிழகம் சார்பாக தீனதயாளன் விஷ்வா உள்ளிட்ட 4 பேர் கலந்து கொள்வதற்காக அசாமில் இருந்து மேகாலயாவுக்கு காரில் சென்றுள்ளனர்.

மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மோதியதில் கார் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் விஷ்வா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக இளம் விளையாட்டு வீரர் தீனதயாளன் விஷ்வா விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.