மக்கள் நீதி மய்யத்தில் மற்றொரு விக்கெட்..! – மாநில நிர்வாகி பதவி விலகல்!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் மாநில நிர்வாகியாக இருந்தவர் பதவியிலிருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனால் 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என போட்டியிட்டு வந்த மக்கள் நீதி மய்யம் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டது. ஆனால் எந்த தேர்தலிலும் மய்யத்தால் குறிப்பிடத்தகுத்த வெற்றியை ஈட்டமுடியவில்லை.
இந்நிலையில் ஒவ்வொரு தேர்தல் நடந்து முடியும்போதும் மக்கள் நீதி மய்யத்திலிருந்து அதன் நிர்வாகிகள் பதவி விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகியான ம.தொல்காப்பியன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களால் கட்சியிலிருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.