திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 12 மே 2022 (18:37 IST)

நாட்டை விட்டு வெளியேற மாட்டோம், எதையும் சந்திக்க தயார்: நமல் ராஜபக்சே

Mahinda
எந்த காரணத்தை முன்னிட்டும் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் என்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார் 
 
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு மகிந்த ராஜபக்சவின் குடும்பம் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே எனக்கோ என் தந்தை மகிந்த ராஜபக்சவிற்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை என்றும் அனைத்தும் பொய் குற்றச்சாட்டுக்கள் என்றும் அதனை நேர்மையாக சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்