திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (12:05 IST)

மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி: தமிழநாடு அரசு

மகளிர் உரிமைத் தொகை வேண்டி மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கி விட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் தகுதி உள்ள நபர்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  
 
மகளிர் உரிமை தொகையை விண்ணப்பங்கள் செய்ததில் 50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதில் தகுதியான நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
தற்போது மேல்முறையீட்டில் தகுதியுள்ள பெண்களை தமிழக அரசு தேர்வு செய்து அவர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran