வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:54 IST)

ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.. உங்களுக்கு இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்துருக்கா?

ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மின்வாரியத்துறை கூறியுள்ளதாவது:
 
1. பதட்டம் அடைய வேண்டாம்
2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்
 
 ஈபி பில் கட்டவில்லை என பல தங்களுக்கு குறுஞ்செய்தி வந்திருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவு செய்துள்ளதை அடுத்து மின்வாரியத்துறை இந்த விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனவே ஈபி பில் கட்டவில்லை என்ற குறுஞ்செய்தி வந்தால் உடனே பதட்டம் அடையாமல் 1930 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva