தொடர்புடைய செய்திகள்
- கல்லூரி மாணவிக்கு தவறான சிகிச்சை? உறவினர்கள் புகாரால் பரபரப்பு..!
- 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- 4ஜி தொழில்நுட்பத்துடன் புதிய ஜியோ பட்டன் ஃபோன்! – JioPhone Prima 4G!
- மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
- என்னய்யா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை? -'வலைபேச்சு' அந்தனன் விமர்சனம்
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் அணிவகுப்புக்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பொது அமைதியை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நவம்பர் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
